தரமற்ற உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.1,00,000 அபராதம் விதித்துள்ளதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி காரே, பிளிப்கார்ட் தனது இ-காமர்ஸ் தளத்தில் தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்காகவும், நுகர்வோரின் உரிமைகளை மீறியதற்காகவும் ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிளிப்கார்ட் தனது பிளாட்ஃபார்மில் விற்கப்படும் அனைத்து 598 பிரஷர் குக்கர்களையும் நுகர்வோருக்கு தெரிவிக்கவும், பிரஷர் குக்கர்களை திரும்பப் பெறவும் மற்றும் நுகர்வோருக்கு பணத்தை திருப்பிச் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
45 நாட்களுக்குள் இது தொடர்பான இணக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.