வெள்ளிக்கிழமை எலண்டே மாலில் உள்ள நி ஹாவ் உணவகத்தில் ஃபிரைடு ரைஸ் தட்டில் ஒரு கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது.
அமித் என்ற வாடிக்கையாளர், தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலின் செய்தித் தொடர்பாளர், “இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது… இது மிகக் குறுகிய காலத்தில் நடந்த இரண்டாவது சம்பவம்… எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது…” என்றார்.